பள்ளி மாணவர்கள் வரைந்த அன்னை தெரசா ஓவியம் 
உள்ளூர் செய்திகள்

பழனியில் அரசு பள்ளி மாணவர்கள் வரைந்த அன்னை தெரசா ஓவியம்

பழனியில் அரசு பள்ளி மாணவர்கள் அன்னை தெரசா ஓவியம் வரைந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது

மாலை மலர்

பழனி:

பழனி பெத்தநாயக் கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மெகா ஓவியம் வரைந்த மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

இப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியர் 192 பேர் 18 அடி நீளம், 12 அடி அகலம் உள்ள ஓவியம் வரைந்தனர்.

பள்ளி மேடையில் வண்ணப் பொடிகளை பயன்படுத்தி, மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி தொடங்கிய ஓவியத்தை 3 நாட்கள் வரைந்தனர்.

அன்னை தெரசா முகத்தை ஓவியத்தில் வடிவமைத்திருந்தனர். வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் தலைமையாசிரியர் சரஸ்வதி முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.