புதிய குடியிருப்புகள் கட்டும் பணி குறித்து கலெக்டர் விசாகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் அரசு புதிய குடியிருப்புகள் கட்டும் பணி

திண்டுக்கல்லில் அரசு புதிய குடியிருப்புகள் கட்டும் பணிக்கு பயனாளிகள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திட்ட செயலாக்க கோட்டம்-1 மதுரை மூலம் மாவட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குழு கூட்டம் கலெக்டர்விசாகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்ட த்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் நகர்ப்புறத்தில் வாழும் ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகளை உருவாக்கும் விதத்தில், அனைவருக்கும் வீடு, பயனாளிகளின் திறனுக்கேற்ற பங்களி ப்புடன் கூடிய வீடு கட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பழனி வட்டம், தாதநாயக்க–ன்பட்டியில் 264 புதிய குடியிருப்புகள் ரூ.29.59 கோடி மதிப்பீட்டிலும், அண்ணாநகர் - கீரனூர் பகுதியில் 432 குடியிருப்புகள் ரூ.47.52 கோடி மதிப்பீட்டிலும், ஒட்டன்சத்திரம் பகுதியில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.52.80 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ளது. மேலும், வீட்டுமனை பட்டா உள்ள நபர்கள் தங்களாக வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தில் 25 திட்ட ப்பகுதியில் 4776 பயனாளிகள் இதுவரை பயன்பெற்றுள்ளனர். 

திண்டுக்கல் வட்டம், ஒடுக்கம் பகுதியில் 870 குடியிருப்புகள் கட்டுவதற்கு ஆரம்ப கட்ட ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கோவிந்தசாமி நகர், ஒத்தக்கண்பாலம், அண்ணாநகர், காமராஜ–புரம், அய்யன்குளம், கோபால சமுத்திரகுளம் ஆகிய பகுதியில் மாந கராட்சிக்குட்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பவர்க–ளுக்கு மறு குடியமர்வு செய்வதற்கு பட்டியல் பெறப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும், 10-15 இடங்களில் புதியதாக இது போன்று வீடு கட்டும் திட்டங்களை  தொடங்கிட வாரியத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரமற்ற பகுதியில் வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு மானியத்துடன் கூடிய வீடுகளை கட்டி தருதல் உள்ளிட்ட பணிகளை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேவையான உதவிகள் மற்றும் பயனாளிகளின் பட்டியல் வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.