பேராவூரணி:
பேராவூரணி அரசு போக்கு வரத்து கழக பணிமனை யில் இருந்து (தடம் எண் 1) அதிராம்பட்டினம் சென்று விட்டு மீண்டும் பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்தது.
மரக்காவலசை அருகே நேற்று மாலை வந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
தொடர்ந்து சேதுபாவா சத்திரம் வழியாக இரண்டா ம்புளிக் காடு சென்றவர்கள் பேராவூரணி பணிமனையைச் சேர்ந்த (தடம் எண் 10) பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து அழகியநாயகிபுரம் வழியாக ஒட்டங்காடு சென்று, மேலஒட்டங்காடு என்ற இடத்தில் பேராவூரணி அரசு போக்குவரத்து கழக நகர பேருந்து பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்த (தடம் எண் 6 ஏ) பேருந்தின் கண்ணாடியை கல்வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மர்ம நபர்கள் குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.