உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த சபிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சபிதா (வயது 20). இவர்களுக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. சபிதாவின் கணவர் பெங்களூரில் லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூருக்கு வேலைக்கு சென்ற ராஜாவுக்கும் சபீதாக்கு செல்போன் மூலம் தகறாறு ஏற்பட்டது, இதனால் மனமுடைந்த சபிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த அக்கம்ப க்கத்தினர் பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.