பொதுக்குழு கூட்டத்தில் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ். தர்மர் பேசியபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் பொதுக்குழு கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கடந்த மாசி மாதம் நடைபெற்ற அய்யா அவதார தின விழா வரவு செலவு கணக்கு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுத்துரை முன்னிலை வகித்தார்.

கடந்த மாசி மாதம் நடைபெற்ற அய்யா அவதார தின விழா வரவு செலவு கணக்கு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில், சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகர், துணைத் தலைவர் அய்யாபழம், இணைத்தலைவர் ராஜதுரை, இணை செயலாளர்கள் வரதராஜ பெருமாள், செல்வின், துணைச் செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் இணைத் தலைவர் சிங்கபாண்டி, முன்னாள் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT