மருத்துவ முகாம் நடைபெற்றபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் இலவச மருத்துவ முகாம்-ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ராஜா எம்.எல்.ஏ.கேட்டறிந்தார்.முகாமில் பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிப்புள்ள நபர்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில்:

தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன் கோவிலில் உள்ள 36 கிராம சேனை தலைவர் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

ராஜா எம்.எல்.ஏ.

தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மருத்துவரணி தலைவர் சுமதி முன்னிலை வகித்தார்.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

முகாமில் பொது மக்களுக்கு சர்க்கரை நோய், பொது மருத்துவம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய்கள், முதுகு வலி, மூட்டு தேய்மானம், மகளிர் நல ஆலோசனை உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிப்புள்ள நபர்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப் பட்டது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், , மாவட்ட விவசாய அணி தலைவர் வெள்ளைத்துரை, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், மருத்துவரணி துணை தலைவர் பேச்சியம்மாள், துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வீமராஜ்,

வக்கீல்கள் நேரு, ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவாஜி, கணேஷ், மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி முத்தமிழ், ஜெயகுமார், ஜான் மருத்துவர்கள் மணிகண்டன், சுமதி, சத்தியபாலன், செல்வமாரி, பேச்சியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.