வள்ளியூர்:
சத்குரு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் குருபூஜையை முன்னிட்டு வள்ளியூரில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. மலையடிவாரம் சூட்டுப் பொத்தையில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வள்ளியூரை சுற்றியுள்ள திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். கண் மருத்துவர்கள் வைதேகி, ரிஷப் தேசய் ஆகியோர் பொதுமக்களை பரிசோதித்தனர். ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.