விழாவில் அய்யப்பன் எம்.எல். ஏ. 100 பேருக்கு கண் கண்ணாடி வழங்கினார். அருகில் டாக்டர் பிரவீன் அய்யப்பன் உள்ளார். 
உள்ளூர் செய்திகள்

கடலூரில் 100 பேருக்கு இலவச கண் கண்ணாடி அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்

முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.

கடலூர்:

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் கடலுார், மஞ்சக்குப்பம் வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் பங்கேற்ற வர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.விழாவிற்கு டாக்டர் பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கினார். விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 பேருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கண் கண்ணாடிகளை வழங்கி னார். விழாவில், முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குண சேகரன், பிரகாஷ், சரத் தினகரன், தமிழரசன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம், பாரூக் அலி, கர்ணன், அரசு காண்டிராக்டர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT