பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் நிகழ்ச்சி- அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கொரோனா தொற்று தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை காலை தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தியாவின்75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர நகர் நல அலுவலர்டாக்டர் அருண்குமார், பொதுசுகாதார அலுவலர்கள், டாக்டர் சூரிய பிரகாஷ் மற்றும் செவிலியர்கள் மாநகராட்சியின் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT