புத்தக பையுடன் மாணவர்கள். 
உள்ளூர் செய்திகள்

களக்காட்டில் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தக பை

களக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக புத்தக பை வழங்கும் விழா நடைபெற்றதுதனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான நலத்திட்ட உதவியில் வட்டார கல்வி அலுவலர் செ.டேவிட்தனபால், பா.சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மாலை மலர்

ஏர்வாடி:

களக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக புத்தக பை வழங்கும் விழா நடைபெற்றது. தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான நலத்திட்ட உதவியில் வட்டார கல்வி அலுவலர் செ.டேவிட்தனபால், பா.சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக நாங்குநேரி வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் வக்கீல் ஆனந்த், வழக்கறிஞர் வெள்ளத்துரை, சேர்மத்துரை மற்றும் மண்டல மேலாளர் மனோகர் ராயன், பிராந்திய மேலாளர் லிங்கபூசன், மார்கெட்டிங் மேலாளர் ஜான் சார்லஸ், கிளை மேலாளர் வேல்முருகன், தலைமை ஆசிரியை வள்ளி, ஆசிரியர்கள் லுசியா, செல்வம், ஜமிலா பானு, சாந்தி, உஷாகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.