இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.  
உள்ளூர் செய்திகள்

சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

சாம்பவர்வடகரை:

சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகவேல், துணைத்தலைவர் சுப்ரமணியன், பொய்கை மாரியப்பன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் வரவேற்றார்.