மான் வேட்டையாடிய கும்பலை படத்தில் காணலாம் 
உள்ளூர் செய்திகள்

ஆயுதங்களுடன் மான் வேட்டையாடிய கும்பல் கைது

திண்டுக்கல் அருகே கன்னிவாடியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே கன்னிவாடி வனச்சரகத் திற்குட்பட்ட பண்ணப்பட்டி பகுதியில் வனக்காப்பாளர் பீர்முகமது, வனக்காவலர் கிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்து சென்றனர்.  அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் மான் வேட்டையாடி சாக்குப் பையில் மான் இறைச்சி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வனச்சரகர் சக்திவேல் மற்றும் வனவர் வெற்றிவேல் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து விசாரித்தபோது கொடைக்கானல் கீழ்மலை கே.சி.பட்டியை சேர்ந்த போஸ் (வயது40). தர்மத்துப்பட்டியை சேர்ந்த மகேந்திரபாபு (37), வெள்ளமரத்துப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி (42), ரகுபதி (40), கங்காதரன் (41) ஆகியோர் மான் வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதில் கங்காதரன் பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து மகேந்திரபாபு, பாலசுப்பிரமணி, ரகுபதி, கங்காதரன் ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ மான் இறைச்சி, 2 மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள போஸ் மற்றும் சக்திவேலை தேடி வருகின்றனர்.