உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி உள்பட 4 பேர் மாயம்

19-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சசிகலா அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் அனுமன் தீர்த்தம் அருகேயுள்ள மொட்டங்குறிச்சி புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மன். இவரது மனைவி சசிகலா (வயது 48).

கடந்த 19-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சசிகலா அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது மகன் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல பர்கூர் போலீஸ் சரகம் கோட்டை பகுதியை சேர்ந்த நவீன்குமார் தனது மனைவி சுமா (26) என்பவரை கடந்த 19-ந்தேதி முதல் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.

மேலும் ஓசூர் ரெயில்வே ஸ்டேசன் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மனைவி இவாஞ்சலின் விஜிதா (35) என்பவரை கடந்த 12-ந்தேதி முதல் காணவில்லை என்று ஹட்கோ போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

இந்த வகையில் பேகைபள்ளி பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகள் நந்தினி (19) என்ற கல்லூரி மாணவி கடந்த 20-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாய் கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.