அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றபோது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் நவீன சுகாதார மையம் அமைக்க அடிக்கல்

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சுகாதார நிலையம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார். நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் மீரான் சேட் காலனியில் ரூ.75 லட்சம் மதிப்பில் பொது சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சிக் கூடம், யோகா நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.

நகர சபை ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொது சுகாதார நிலையம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சோம செல்வ பாண்டியன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் எம்.எஸ். ராஜ், துணை செயலாளர் குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் டைட்டஸ் ஆதித்தன், ம.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் நடுவை முருகன்,

காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் மனோகரன், தி.மு.க. நகர நிர்வாகி பிரகாஷ், நகரத் துணைச் செயலாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் மாரிச்சாமி, எஸ்.டி.எஸ். சரவணக்குமார், புனிதா, புஷ்பம், குருப்பிரியா மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, கேபிள் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT