பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள். 
உள்ளூர் செய்திகள்

சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா

அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாலை மலர்

பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் முல்லை நகரில் எழுந்தருளி இருக்கும் சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.

குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், அலகு காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து நேத்தி கடன் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

108 சிவாலயம் முல்லை நகர், கிராமவாசிகள், விழா குழுவினர், மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.