கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த டி.கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ் (வயது33). கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான சிம்மிரெட்டி (54) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி அன்று மீண்டும் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் சிம்மிரெட்டி, அவரது மகன் நடிரெட்டி ஆகிய 2 பேரும் சேர்ந்து முருகேஷையும், அவரது உறவினர் நாராயணன் என்பவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த 2 பேரும் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முருகேஷ் பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் சிம்மிரெட்டி, அவரது மகன் நடிரெட்டி ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.