அவினாசி :
அவினாசியை அடுத்து குறும்பபாளையத்தில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன்(வயது 48) .இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் மது போதையில் தனது மூத்த மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவரது மனைவி கவிதா அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கோபாலகிருஷ்ணனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.