கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

தேனியில் 20-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி:

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20ந் தேதி காலை 11.00 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம். இந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அடுத்து நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகளிடம் நேரிடையாக தெரிவிக்கப்படும்.

எனவே, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.