உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் மோதி விவசாயி சாவு

தருமபுரி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலியானர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பும்போது விபத்து

தருமபுரி மாவட்டம் சோகத்தூர் அருகேயுள்ள கீழ்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(36) விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி(32) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் வாசுதேவன் பச்சினம்பட்டியில் உள்ள தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு தனது மனைவி ராஜேஸ்வரியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று மனைவியே அங்கு இருக்க சொல்லி விட்டு மீண்டும் தனது ஊரான கீழ்நாயக்கன்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது தருமபுரி- பாப்பாரப்பட்டி சாலையில் உள்ள தனியார் பேட்ரொல் பங்க் அருகில் வந்தபோது பாப்பாரப்பட்டியில் இருந்து வந்த அரசு பஸ், வாசுதேவன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் துக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த வாசுதேவனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு வாசுதேவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வாசுதேவன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தருமபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

SCROLL FOR NEXT