உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி விவசாயி சாவு

அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி ஜவுளிகடை தெரு சேர்ந்தவர் சண்முகம் (வயது 58) விவசாயி. மேலும் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை திருத்துறைப்பூண்டி அருகே அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு சென்ற ெரயில் சண்முகம் மீது மோதியது.

இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

SCROLL FOR NEXT