உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் பலியான வழக்கில் விவசாயி கைது

காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார். மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம்கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராயன். இவர்இவரதுநிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிர்களை காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலத்தில்மணிலா அறுவடை பணிக்காக மணம்தவழ்ந்த புத்தூர்காலனியை சேர்ந்த சேட்டுமனைவி தனலட்சுமி (வயது 65) வந்தார்.அவர் அங்கிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ்சூப்பிரண்டுசபியுல்லா,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விவசாயி சுப்புராயனை கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

SCROLL FOR NEXT