கைது செய்யபட்ட போலி டாக்டர்கள். 
உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் அருகே போலி டாக்டர்கள் சிறையில் அடைப்பு

அலோபதி மருத்துவம் பயின்றதற்கான சான்றிதழ் இன்றியும், எவ்வித அனுபவம் இல்லாமலும் மருத்துவம் பார்த்து கொண்டிருந்தார்.விசாரணையில் போலியாக மருத்துவம் பார்த்த இரண்டு நபரையும் கைது செய்தனர்.

 தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் கிராமத்தில் நடராஜன் என்ற பெயரில் கிளினிக் வைத்து, மக்களுக்கு போலியாக அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக தருமபுரி மாவட்ட மருத்துவத்துறை நிர்வாகத்திற்கு வந்த புகாரின் பேரில் மருத்துவக் குழுவினரும் காவல்துறையினரும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அலோபதி மருத்துவம் பயின்றதற்கான சான்றிதழ் இன்றியும், அலோபதி மருத்துவம் பார்ப்பதற்கு எவ்வித அனுபவம் இல்லாமலும் மருத்துவம் பார்த்து கொண்டிருந்ததாக, நடராஜன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இரண்டு நபர்களை பென்னாகரம் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் போலியாக மருத்துவம் பார்த்த இரண்டு நபரையும் கைது செய்து நீதிமன்றத்தி ல் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT