உயிரிழந்த மாணவன் சம்பத்குமார். 
உள்ளூர் செய்திகள்

காந்திகிராம பல்கலைக்கழக விடுதியில் உயிரிழந்த மாணவரின் கண்கள் தானம்

காந்திகிராம பல்கலைக்கழக விடுதியில் உயிரிழந்த மாணவரின் கண்கள் தானம் செய்யப்பட்டது.

மதுரை எஸ்.எஸ். காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தென்னக ரெயில்வேயில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சம்பத்குமார் (வயது20).

இவர் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கூட்டுறவுத்துறை இளங்கலை 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இதனிடையே உயிரிழந்த மாணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக தந்தை ராஜேந்திரன் மற்றும் தாய் சந்திரா ஆகியோர் தெரிவித்தனர்.

ஆனால் பிற உறுப்புகளை எடுப்பதற்கான காலஅவகாசம் முடிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே அவரது கண்களை மட்டும் தானமாக பெற்றுக் கொண்டனர்.

படிப்பில் சிறந்த மாணவரான சம்பத்குமார் 11ம் வகுப்பு படிக்கும்போது வாசலில் மோதி காயம் ஏற்பட்டது. இதனால் அவரது தலையில் ரத்தம் உறைந்துள்ளது. அதன் பாதிப்பு தற்போது ஏற்பட்டு சம்பத்குமார் உயிரிழந் துள்ளார்.