உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே பரபரப்பு: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய கும்பல்

ஆரங்கி தனது மகள் சந்தியாவுடன் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாழை தோப்பில் இருந்தார். அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர்.

மாலை மலர்

கடலூர்:

கடலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய கும்ப லை போலீசார் தேடி வருகிறார்கள். கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் ஆரங்கி. (வயது 55) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் தனது மகள் சந்தியாவுடன் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாழை தோப்பில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆரங்கி, அங்கிருந்த கும்பலிடம் யார் என விசாரித்துக் கொண்டிருந்தார். 

அப்போது 3 பேரும் திடீரென்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கியை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் காயமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 3பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். கடலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை மர்மகும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.