பேரிஜம் ஏரி 
உள்ளூர் செய்திகள்

பேரிஜம் ஏரிக்கு செல்ல கூடுதல் கட்டணம் நிர்ணய

கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல கூடுதல் கட்டணம் விதிப்பால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை எழில் கொஞ்சும் பல சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் பேரிஜம் ஏரி மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. பேரிஜம் வனப் பகுதிக்கு செல்லும் வழியில் அமைதிப் பள்ளத்தாக்கு, மதிகெட்டான் சோலை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

பேரிஜம் ஏரியை காண் பதற்காக வனப்பகுதியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் சிறிய ரக வாகனங்களுக்கு ரூ.200 என இருந்த கட்டணம் தற்போது ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் பெரிய ரக வாகனங்களுக்கு ரூ.300ல் இருந்து ரூ.500 ஆக நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. வனத்துறையால் வாகனம் ஒன்றுக்கு தொகை வசூலிக்கப்படும் அளவுக்கு அங்கு அடிப்படை வசதிகள் ஏதும் ஏற்படுத்தித் தரவில்லை என்று பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது நுழைவுக் கட்டணமும் அதிகரித்திருப்பதால் சுற்றுலா வளர்ச்சி பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும், இந்த கட்டண உயர்வை வனத்துறை மீண்டும் பரிசீலனை செய்து மீண்டும் குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.