உள்ளூர் செய்திகள்

நீரில் மூழ்கி வாலிபர் பலி

வெளியே சென்ற பாலகிருஷ்ணன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.பள்ளத்தில் நீரில் மூழ்கி பாலகிருஷ்ணன் இறந்தது தெரிய வந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் அறிய சாந்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன்(39). இவரது மனைவி அந்தோணி அம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

தவிட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் பாலகிருஷ்ணன் வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது அருந்தி மீன் பிடிக்க செல்வது வழக்கம். அதேப்போல் சம்பவத்தன்று வெளியே சென்ற பால கிருஷ்ணன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஆர்.வி.எஸ்.நகர் அருகே மந்தக்காடு பகுதியில் உள்ள பள்ளத்தில் நீரில் மூழ்கி பாலகிருஷ்ணன் இறந்தது தெரிய வந்தது.

அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.