உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு தாமரைசெல்வி அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கணபதி நகரை சேர்ந்தவர் நவீன் என்ற நவீன்குமார்(30). கூலி தொழிலாளி. இவருக்கு தாமரைசெல்வி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனா்.

நவீன்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு தாமரைசெல்வி அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இந்நிலையில் நவீன்குமார் தாமரை செல்வியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு அவர் எப்போது குடிப்பழக்கத்தை கைவிடு வீர்களோ அப்போதுதான் வருவேன் என்று கூறினார். இதனால் மனவேதனை அடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.