உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலி

ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் சோளக் காளிபாளையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

கொடுமுடி:

கொடுமுடி அருகே உள்ள பெரிய வட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (52). இவரது மனைவி லட்சுமி (47). கணவன்-மனைவி இருவரும் கொடுமுடி கடை வீதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் சோளக் காளிபாளையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பழனிசாமி, லட்சுமி நிலை தடுமாறி கிழே விழுந்தனர். இதில் லட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாகமாக இறந்தார்.

இதில் பழனிசாமி படு காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் பழனிசாமியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரி விக்க ப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் லட்சுமி உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.

இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.