உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை

மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள், மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரதான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன.

சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி, பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் நேற்று மாவட்ட முழுவதும் மாலை முதல் இரவு வரை பலத்த முதல் மிதமான மழை வரை பெய்துள்ளது. மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதன் காரணமாக இந்த பகுதிகளில் ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இங்கு 31.40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

இதேபோல் பவானிசாகர், பெருந்துறை, குண்டேரிபள்ளம், அம்மா பேட்டை, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, கொடுமுடி, நம்பியூர், பவானி, கோபி, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மாநகர பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

மொடக்குறிச்சி-31.40, பவானிசாகர்-30.2, பெருந்துறை-21, குண்டேரிபள்ளம்-21, அம்மாபேட்டை-15.60, ஈரோடு-12, சத்திய மங்கலம்-12, கவுந்தப்பாடி-6.20, கொடுமுடி-6, நம்பியூர்-5, கோபி-3.20, பவானி-3, வரட்டுபள்ளம்-1.40.