உள்ளூர் செய்திகள்

கொரோனா பாதிப்புடன் 5 பேருக்கு சிகிச்சை

ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து 2-ம் அலை தாக்கம் காரணமாக மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. முதியவர்கள், நோய் உள்ளவர்கள் உயிரிழந்தனர். அனைத்து மருத்துவமனையிலும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தது. கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. முக கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டது.

இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லை.

இந்நிலையில் சுகாதாரத் துறையினர் நேற்று வெளியிட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 671 ஆக உள்ளது.

இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 932 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.