உள்ளூர் செய்திகள்

தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

சம்பவத்தன்று சென்னியப்பன் வீட்டின் வாசலில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த அலிங்கியம், அர்ஜுன காலனி பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (48).

இவர் சம்பவத்தன்று வீட்டின் வாசலில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சை க்காக சென்னியப்பன் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.