உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

தனுஷ் தனது மோட்டார் சைக்கிளில் பூதப்பாடியில் இருந்து கருங்கரடு சென்று கொண்டிருந்தார்.அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மோட்டார் சைக்கிளுடன் இழுத்து சென்று லாரிக்குள் விழுந்தார்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி கருங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன்.

இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களது மகன் தனுஷ் (26). டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் தனது மோட்டார் சைக்கிளில் பூதப்பாடியில் இருந்து கருங்கரடு சென்று கொண்டிருந்தார்.

அப்போது குருவரெட்டியூர் அக்னி மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது வளைவில் டிப்பர்லாரி ஒன்று வந்துள்ளது.

அதனை பார்த்த தனுஷ் பிரேக் பிடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மோட்டார் சைக்கிளுடன் இழுத்து சென்று லாரிக்குள் விழுந்தார்.

அப்போது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.