உள்ளூர் செய்திகள்

லாரியில் இருந்து தவறி கீழே விழுந்து வாலிபர் பலி

மாதேஷ் லாரியில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார்.தலை மற்றும் வலது முழங்கையில் பலத்த அடிபட்டது.

ஈரோடு:

கர்நாடகா மாநிலம் மார்ட்டல்லி, கொல்லேகால் தாலுகா, ஒட்டரெதொட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (38). லாரி கிளீனர். இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலம் மேட்டூர் சேத்தான் கோட்டாயை சேர்ந்த தனது தாய் மாமன் பாலசுப்பிர–மணியம் என்பவருக்கு சொந்தமான லாரியில் கிளீனராக வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

இந்நிலையில் சம்பத்தன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி கைகாட்டி அருகே உள்ள ஒரு தனியார் ரைஸ் மில்லுக்கு மாதேஷ் வந்துள்ளார்.

நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நெல் மூட்டைகளை இறக்காமல் நெல் மூட்டைகளுடன் தலைய நல்லூர் ஈஸ்வரன் கோவில் அருகே லாரியை நிறுத்திவிட்டு பாலசுப்பிரமணி மற்றும் மாதேஷ் இருவரும் படுத்து தூங்கினர்.

பின்னர் காலை 8 மணி அளவில் மாதேஷ் லாரியில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் வலது முழங்கையில் பலத்த அடிபட்டது.

இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோத்து விட்டு மாதேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT