உள்ளூர் செய்திகள்

மொபட்டில் இருந்து கீழே விழுந்து மெக்கானி பலி

நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தார். சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.

பெருந்துறை:

பவானி சீட்டி காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 33). மெக்கானிக். இவர் சம்பவத்தன்று இரவு பெருந்துறை சிப்காட்டில் வேலையை முடித்து விட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பி சென்றார்.

பெருந்துறை பவானி ரோடு, டீச்சர் காலனி அருகில் சென்றபோது நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.