உள்ளூர் செய்திகள்

கட்டிட மேஸ்திரி மூச்சுத் திணறி சாவு

ஆதையாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.பரிசோ தித்த டாக்டர் வரும் வழியிலேயே ஆதையா இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

ஈரோடு:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி, எடப்பாளையம், யாதவா கோவில் வீதியை சேர்ந்தவர் ஆதையா (51). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஆதை யாவுக்கு வேறு ஒரு பெண்ணு டன் தொடர்பு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் தன் குடும்பத்தை பிரிந்து அந்த பெண்ணுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள பாலக்காட்டூர் பகுதி யில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஆதையாவும், அவருடன் வசித்து வந்த பெண்ணும் பாலக்காட்டூர் காலிங்கராயன் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது ஆதையாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர் வரும் வழியி லேயே ஆதையா இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT