உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

மது அருந்தும் பழக்கமுடைய வினோத்குமாருக்கு கடந்த 2 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.அதனால் தான் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு மாதத்தவணை செலுத்த தனது தந்தை கோவிந்தராஜிடம் பணம் கேட்டுள்ளார்.

மாலை மலர்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் வேட்டைக்காரன் கோயில் மேற்கு கரடு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (23).

இவர் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள ஒரு பீட்சா, பர்கர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

மது அருந்தும் பழக்கமுடைய வினோத்குமாருக்கு கடந்த 2 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

இதற்காக அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக வினோத்குமார் வேலைக்கு செல்லவில்லை. அதனால் தான் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு மாதத்தவணை செலுத்த தனது தந்தை கோவிந்தராஜிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் ஒரு வாரத்தில் தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் சாப்பிட்டு விட்டு தூங்க செல்வதாக தனது தாயாரிடம் கூறி சென்ற வினோத்குமார் படுக்கை அறைக்குள் சென்று சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.

சற்று நேரம் கழித்து அதை பார்த்த அவரது தாயார் உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வினோத்குமாரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே வினோத்குமார் இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து வினோத்குமாரின் தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.