ஈரோடு:
ஈரோடு வி.வி.சி.ஆர். நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் சசிந்திரன் (24). இவர் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு ள்ளது.
இதனால் சசிந்திரன் மனைவி அடிக்கடி கோபித்து கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்று விடுவார். இந்நிலையில் சசிந்திரனின் குடிப்பழக்கத்தை காரணம் காட்டி அவருடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஏற்கனவே மனைவி, குழந்தைகளை பிரிந்த சோகத்தில் இருந்த சசிந்திரன் விவாகரத்து நோட்டீசால் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் விரக்தியில் இருந்த சசிந்திரன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.