உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூர் நாயக்கர் வீதியை சேர்ந்த ரங்கநாயக்கர் மகன் சித்தராஜ்(19). லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். சித்தராஜ்க்கு கடந்த 3 மாதங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்தது.

இதனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. கடந்த 4-ந் தேதி இரவு கடுமையான வயிற்று வலி காரணமாக வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, சித்தராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.