உள்ளூர் செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி, டி. பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (40). இவரது மனைவி பிரீத்தா.

திருமணம் ஆகி 2 மாதத்தில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கவுரி சங்கரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதனையடுத்து கவுரிசங்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து திரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவுரிசங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.