உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் பெட்ரோல் ஊற்றி தீ குளித்து புரோகிதர் தற்கொலை

குடும்பத்தகராறில் மணிகண்டன் தீ வைத்துக்கொண்டார்.இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன்பாளையம் கிழக்கு முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவரது மனைவி உமா மகேஸ்வரி.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மணிகண்டன் பவானி கூடுதுறையில் பரிகார புரோகிதராக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் கிடைக்காததால் பல்வேறு இடங்களில் மணிகண்டன் கடன் வாங்கி உள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று குடும்பத்தகராறில் திடீரென்று பெட்ரோலை எடுத்து தனக்கு தானே ஊற்றி மணிகண்டன் தீ வைத்துக்கொண்டார்.

பின்னர் மணிகண்டன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.