உள்ளூர் செய்திகள்

பவானி அருகே பெயிண்டர் தற்கொலை

தண்டாயுதபாணி இறந்து உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி:

ஈரோடு மாவட்டம் பவா னியில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் உள்ள பெருமாள்மலை அடிவாரப் பகுதியை சேர்ந்தவர் தண் டாயுதபாணி (வயது 36).

இவரின் தாய் தந்தை உடல் நல குறைவால் இறந்த நிலையில் தனியாக பெயிண்டர் வேலை செய்து அப்பகுதியில் வீடு ஒன்றில் குடியிருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தண்டாயு தபாணி மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் தண்டாயு தபாணி வீட்டின் அருகில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவர் தண்டாயுதபாணி வீடு 2 நாட்களாக பூட்டியிருந்த நிலையில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

அப்போது தண்டாயுதபாணி இறந்து உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இறந்து கிடந்த த ண்டாயுதபாணி உடலை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தண்டாயுதபாணி உறவினர் ராஜவேல் இதுகுறித்து சித்தோடு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.