உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி மூதாட்டி பலி

மூதாட்டி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோவில் ரோடு பகுதியில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்தார்.

சம்பவத்தன்று அதிகாலை அந்த மூதாட்டி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT