ஈரோடு:
ஒடிசா மாநிலம் பார்டர்க் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன் மாலிக் (25). இவர் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் சம்பவத் தன்று ரஞ்சன்மாலிக் பனியம்பள்ளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
அவரது நண்பர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரஞ்சன் மாலிக்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஏற்கனவே ரஞ்சன் மாலிக் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரஞ்சன் மாலிக் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார் என தெரியவில்லை.
திருமணம் ஆகாத ஏக்கத்தால் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.