உள்ளூர் செய்திகள்

காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

புளியம்பட்டி அருகே காரில் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தி வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்கும் சம்பவம் நடந்து வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தர வின் பேரில் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடித்து ரேஷன் அரிசி யை பறிமுதல் செய்து வரு கின்றனர்.

இதையொட்டி ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் புளியம்பட்டி அடுத்த ஆனூர் ரோடு, அவிநாசி பிரிவு பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 650 கிலோ ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய போது காரை ஓட்டி வந்தவர் சத்தியமங்கலம், நேரு நகரை சேர்ந்த சதீஷ்குமார் (38) என தெரியவந்தது. இவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு வடமாநிலத்தவர்களுக்கு விற்க சென்றது தெரி யவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT