கோப்புப்படம். 
உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

ஈரோடு:

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள பங்களாபுதூர், டி.ஜி.புதூர் பகுதியில் பங்களாபுதூர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே உள்ள பள்ளத்தில் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் டி.ஜி.புதூர் பங்களாமேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 51 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.