கோப்புப்படம். 
உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

மாலை மலர்

பவானிசாகர்:

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 86.51 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1413 கன அடியாக அதிகரித்து உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 200 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 2380 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 80 கன அடி தண்ணீர் வெறியேற்றப்பட்டு வருகிறது.