உள்ளூர் செய்திகள்

வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற ஆன்லைன் மூலம் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெற உருவாக்கப்பட்டது. உள்ளிட்ட பல துறையின் திட்டங்களில் பயனடைய வாய்ப்பு வழங்கப்படும்.

ஈரோடு, 

வேளாண் உதவி இயக்குனர் மா.சாமுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாண் அடுக்கு திட்டம் தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெற உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தில் இணைய கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகள் தங்கள் ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்ற கிரையன்ஸ் என்ற இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

திட்டத்தில் இணைந்தவர்களுக்கு வேளாண் துறை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல துறையின் திட்டங்களில் பயனடைய வாய்ப்பு வழங்கப்படும். நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடியாக பண பரிமாற்றம் மூலம் விவசாயி வங்கி கணக்கில் வரவாகும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT