உள்ளூர் செய்திகள்

பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.கே.என்.பாளையம் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அருகே ஒரு இடத்தில் பிரகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

டி.என்.பாளையம், செப். 16-

கோபிசெட்டி பாளையத்தை அடுத்த நாகர்பாளையம் ரோடு, கந்தசாமி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (38). பி .எஸ்.சி. பட்டதாரி. பிரகாஷ் சரியாக வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது உறவி னர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

பிரகாசை உறவினர்கள், பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.இந்த நிலையில் கே.என்.பாளையம் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அருகே ஒரு இடத்தில் பிரகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.