உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பவானி வட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கலைத்து உரிய காப்பீட்டுத் தொகை யை வழங்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பவானி:

பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பவானி வட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பி.ஏ.இ.எல். சரண்டர் ஆகிய வற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கலைத்து உரிய காப்பீட்டுத் தொகை யை வழங்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தாசில்தார் ரவிச்சந்திரன், தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் மண்டல துணை தாசில்தார் மோகனா உள்பட வருவாய்த்துறை அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.