தற்கொலை செய்து கொண்ட பவித்ரா. 
உள்ளூர் செய்திகள்

பெண் தூக்குபோட்டு தற்கொலை

பவித்ரா வீட்டின் மேல் உள்ள இரும்பு கம்பியில் சேலையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.திருமணமாகி 5 வருடங்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம சர்க்கரை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பவித்ரா (24). இவர்களுக்கு திருமண மாகி 5 வருடங்கள் ஆகிய நிலையில் 2½ வயதில் நவின் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் பவித்ரா வீட்டில் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்களிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து உறவினர்கள் சென்று விட்டனர். வேலை முடிந்து மணிகண்டன் வீட்டிற்கு வந்து பவித்ராவை கூப்பி ட்டு உள்ளார். எந்த பதிலும் வராததால் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளார்.

இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பவித்ரா வீட்டின் மேல் உள்ள இரும்பு கம்பியில் சேலையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.

உடனே உறவினர்கள் உதவியுடன் பவித்ராவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே பவித்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட பவித்ராவிற்கு திருமணமாகி 5 வருடங்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.